கோலாலம்பூர், ஏப்ரல் 16 - தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ரோபோட்டிக் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நோக்கில், மலேசிய மக்கள் நல சேவை இயக்கம் மாபெரும் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்கக் கூடிய இத்திட்டத்திற்கு Celik Robotic என பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் இத்துறையில் தங்களின் படைப்பாற்றலை வெளிக்கொணர ஏதுவாக, முறையான திட்டமிடலோடு ஜூன் மாதத்தில் இப்போட்டி நடைபெறுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பள்ளிகளில், ரோபோட்டிக் பாடம் ஓர் அங்கமாக உள்ள போதும், அத்துறையில் நம் மாணவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது.
எனவே, அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
மேல் தகவல்களைக் பெற கந்தன் சுவாமிநாதனை 013-7742624 அல்லது 018-352 0711 என்ற கைப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.


