கோலாலம்பூர், ஏப்ரல் 16 - சீனா மற்றும் மலேசியாவின் கூட்டு முயற்சிகளின் வழி மலேசியாவுக்கான தனது வருகை ஊக்கமளிக்கும் பலன்களைத் தரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருகை இருதரப்பு உறவுகளில் "50 ஆண்டு பொற்காலத்தின்" புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தமது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு-அண்டை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று நம்புவதாக அதிபர் ஜி கோலாலம்பூர் அனைத்துலகக விமான நிலையம் வந்தடைந்ததும் வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறினார்.


