புத்ரஜெயா, ஏப்ரல் 15 - மைகார்டில் ரொக்க உதவித் தொகையாக 300 வெள்ளி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இணைப்பை தேசிய பதிவுத் துறை மறுத்துள்ளது.
அந்தத் தகவல் தவறானது என்பதோடு தாங்கள் எந்த வகையான நிதியுதவியையும் வழங்கவில்லை என்று அத்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் அறிவித்தது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் பதிவுகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம். அதேசமயம் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்த விரும்புகிறோம் என்று அத்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மற்றும் எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி உதவி தொடர்பான உண்மையான தகவல்களை அதிகாரப்பூர்வ ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்திற்கான (எஸ்.டி.ஆர்.) https://bantuantunai.hasil.


