ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 15 - ஜார்ஜ்டவுன், பண்டாராயா அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் கேஎல் சிட்டி எஃப் சி. பினாங்கு எஃப் சி-யிடம் 0-1 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பினாங்கு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது அதன் பலனாக 27ஆவது நிமிடத்தில் `Allt ikmalrizal` மூலம் அவரணிக்கான முதல் கோலை அடித்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கேஎல் சிட்டி, `Patrick Reichelt` மூலம் ஆட்டத்தை சமன் செய்ய முயற்சித்தாலும் offside-டினால் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் பினாங்கின் இரண்டாவது கோலைப் போடும் முயற்சி எதிர் கோல் காவலர் `Muhammad Azri Ab Ghani யின் ஆட்டத்திறனால் பலனளிக்காமல் போனது.
ஆட்டம் 1-0 என்ற புள்ளிகளில் பினாங்கிற்கு சாதகமாக நிறைவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் 2-1 என்ற புள்ளிகளில் கிளந்தான் டாருல் நைம் எஃப் சி-யை தோற்கடித்தது.
அவ்வணியின் இரண்டு கோல்களில் முதல் கோல் ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் `Takumi Sasakl-யாலும், ஆட்டத்தின் இறுதியில் ``Nasrullah Hanitt johan`னாலும் அடிக்கப்பட்டது.
--பெர்னாமா


