ஷா ஆலம், ஏப்ரல் 15 - தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) நேற்றிரவு 7.10 மணியளவில் காலமான துன் அப்துல்லா அகமது படாவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐந்தாவது பிரதமரின் மரணம் மலேசியர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அமிருடின் கூறினார்.
இறைவன் அருளால் அவரது ஆன்மா உயர்ந்த பண்பாளர்களுடன் சேரட்டும் என்று அவர் நேற்றிரவு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
'பாக் லா' என என அன்போடு அழைக்கப்படும் அப்துல்லா, சுவாசக் கோளாறு காரணமாக நேற்று அதிகாலை 3.00 மணிக்கு ஐ.ஜே.என். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்துல்லாவின் மரணத்தை அவரது மருமகன் கைரி ஜமாலுடின் இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தினார்.


