பெய்ஜிங், ஏப்ரல் 15 - சீனாவில் நடைபெற்ற ஆசியப் பூப்பந்துப் போட்டியில், உபசரணை நாட்டுப் போட்டியாளர்களை வீழ்த்தி தேசியப் பூப்பந்து ஆடவர் இரட்டையரான ஏரன் சியா- சோ வூய் யிக் பட்டம் வென்றனர்.
உலகத் தர வரிசையில் 6-ஆமிடத்தில் உள்ள ஏரன் சியா-யூய் யிக், 16-ஆவது இடத்திலுள்ள ச்சென் போயாங் லியூ யீ இணையை 21-19, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தனர்.
அரங்கம் நிறைந்த உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய சீன ஜோடியை, மலேசிய இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 46 நிமிடங்களில் வென்றது.
அவர்கள் 163,716 ரிங்கிட் பரிசுப் பணத்தையும், தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.
இவ்வாண்டு இதற்கு முன் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பூர்வாங்கச் சுற்றோடு வெளியேறிய ஏரன் சியா -யூய் யிக்கு, இந்த வெற்றியாளர் பட்டம் புது தெம்பை கொடுத்துள்ளது.
அவர்கள் கடைசியாகப் பட்டம் வென்றது கடந்தாண்டு நவம்பர் ஆகும்.


