கோலாலம்பூர், ஏப்ரல் 15 - இங்குள்ள மாவீரர் மையத்துக் கொல்லையில் அரசாங்க மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் நல்லுடல்
இன்று காலை 8.15 மணிக்கு தேசிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்பட்டது.
முன்னாள் பிரதமரின் நல்லுடலை ஏற்றிச் சென்ற வேன் பெர்சியாரான் துவாங்கு ஜாபர், பைட் படாவியில் உள்ள மறைந்த பிரதமரின் இல்லத்திலிருந்து தேசிய பள்ளிவாசல் வளாகம் வந்து சேர்ந்தது.
மறைந்த துன் அப்துல்லாவுக்கு பொதுமக்கள் இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தேசிய பள்ளிவாசலின் பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
பின்னர் நண்பகலுக்குப் பிறகு அன்னாரின் உடல் நல்லடக்கச் சடங்கிற்காக மாவீரர் மையத்துக் கொல்லைக்கு கொண்டுச் செல்லப்படும்.
அப்துல்லா நேற்றிரவு 7.10 மணிக்கு தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என.) தனது 85வது வயதில் காலமானார்.


