NATIONAL

கார் மோதி பாதசாரி மரணம் - ஷா ஆலமில் சம்பவம்

15 ஏப்ரல் 2025, 1:30 AM
கார் மோதி பாதசாரி மரணம் - ஷா ஆலமில் சம்பவம்

ஷா ஆலம், ஏப் 15 - இங்குள்ள செக்சன் 19, ஜாலான் ஜூப்ளி பேராக் பஸ்

நிறுத்தம் அருகே நேற்று மூதாட்டி ஒருவர் கார் ஒன்றினால் மோதப்பட்டு

உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு நிகழ்ந்ததாக ஷா ஆலம்

மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

முதியவரான சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநர் தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள

பள்ளிவாசலில் தொழுகையில் கலந்து கொள்வதற்காக சென்று

கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

வீடு ஏதும் இல்லாதவரான 52 வயது மூதாட்டி சம்பவம் நிகழ்ந்த

இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சவப்பரிசோதனைக்காக ஷா

ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர்

குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்

சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர்

சொன்னார்.

இந்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 019-7757354 என்ற

எண்களில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சாலை

போக்குவரத்து பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது நஜிப்

அப்துல் ரஹ்மானைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.