ஷா ஆலம், ஏப்ரல் 12- ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 16 இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கே டி இ.பி. மேனேஜ்மெண்ட் கழிவு மேலாண்மை நிறுவனம் உடனடியாக துப்புரவுப் பணியாளர்களை களமிறக்கியது.
செக்சன் 7, செக்சன் 19, செக்சன் 23 முதல் செக்சன் 28, செக்சன் 33 முதல் செக்சன் 36 மற்றும் பாடாங் ஜாவா ஆகிய பகுதிகளில் சுமார் 30 தொழிலாளர்கள் வெள்ளக் கழிவுகளை, குறிப்பாக மொத்தக் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர் என்று அதன் நிர்வாக இயக்குநர் நிர்வாக இயக்குனர் டத்தோ ரம்லி தாஹிர் கூறினார்.
வெள்ளத்தால் சேதமடைந்த பொருள்கள் மற்றும் தளவாடங்களை அகற்றுவதற்கு அனைத்து இடங்களிலும் மொத்தம் 70 ரோல் ஆன் ரோல் ஆஃப் (ரோரோ) தோம்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவ தாங்கள் எப்போதும் தயாராக உள்ளதோடு கடப்பாடும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தூய்மையைப் பராமரிப்பதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதோடு வெள்ளத்தின் போதும் அதற்குப் பிறகும் கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் என்று ரம்லி அறிவுறுத்தினார்.
வடிகால் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவாக வடிகால் அல்லது ஆறுகளில் குப்பைகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான பொருட்களையும் மின்சாதனங்களை உயரமான இடங்களில் வைக்கவும் வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


