சிலாங்கூர், ஏப்ரல் 11 - சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண மையத்தில் இம்மாதம் 3 தொடங்கி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மெக்கார் எனப்படும் மக்கள் அன்பை விதைக்கும் திட்டத்தின் மூலம் 443 விண்ணப்பங்களைத் தேசிய பதிவுத் துறை, ஜேபிஎன் வெற்றிகரமாகப் பதிவுச் செய்துள்ளது.
அக்காலக்கட்டம் முழுவதும், 249 பிறப்பு சான்றிதழ்கள், ஒரு இறப்பு சான்றிதழ், ஏழு திருமண சான்றிதழ்களைத் தவிர்த்து, 172 மாற்று அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதோடு, பொதுமக்களுக்கு, 291 ஆலோசனை வழங்கும் அமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும், காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை புத்ராஜெயா ஜேபிஎன்னைச் சேர்ந்த மெக்கார் பேருந்து மற்றும் சிலாங்கூர் ஜேபிஎன்னைச் சேர்ந்த மெக்கார் வேனின் மூலம் இரண்டு நடமாடும் முகப்புகளாக மெக்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் முக்கிய ஆவணங்களை நேரடியாகவும் விரைவாகவும் பெற்றுக் கொள்வதற்கு, அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பெர்னாமா


