நிங்போ, ஏப்ரல் 10 - சீனா நிங்போவில் நடைபெற்ற 2025 ஆசிய பூப்பந்து போட்டியின் தொடக்கச் சுற்றில், மலேசியாவின் ஆடவர் இரட்டையர்களான கோ ஸே ஃபெய் நூர் இஸ்சுடின் ரும்சனி வெற்றி பெற்றனர்.
உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்த ஜோடி, ஜப்பான் ஆட்டக்காரர்களை நேரடி செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய ஃபெய் நூர் இஸ்சுடின் ரும்சனி ஜோடி, 37 நிமிடங்களில் 21-16, 21-18 என்று தங்களின் வெற்றியை உறுதி செய்தது.
ஜப்பான் இணையருக்கு எதிரான ஐந்து போட்டிகளில் மலேசிய ஜோடிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.
கடந்த ஆண்டு, இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மலேசிய இணை, இன்று நடைபெறும் சிறந்த 16 ஆட்டக்கார்களுக்கான சுற்றில் தாய்லாந்து உடன் மோதுகின்றது.


