கோலாலம்பூர், ஏப்ரல் 10 - 2030-ஆம் ஆண்டிற்குள் நியூசிலாந்துடனான இருதரப்பு வர்த்தகத்தை 50 விழுக்காடு அதிகரித்து, 2500 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாக மதிப்பிடப்படுவதை முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிச்சயமற்ற உலகப் பொருளாதாரத்தில், நியூசிலாந்து போன்ற வர்த்தக பங்காளிகளை மலேசியா மதிப்பதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஐஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
மலேசியாவுக்கான நியூசிலாந்து தூதர் மைக்கேல் வெஹி மைவேடோங்கா வால்ஷிணை வரவேற்ற தெங்கு டத்தோ ஸ்ரீ சகப்ரூல் தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.
மலேசியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகக் கூறிய சகப்ரூல், 2023-ஆம் ஆண்டு தொடங்கி வியூகக் கூட்டாண்மை நிலை உட்பட கடந்தாண்டு நியூசிலாந்து பிரதமரின் வருகையால் மேலும் வலுப்பெற்றதாகக் குறிப்பிட்டார்.
--பெர்னாமா


