கோலாலம்பூர், ஏப். 10 - இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு 15
நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால விலை உச்சவரம்பு திட்ட
அமலாக்கத்தை பின்பற்றத் தவறிய 386 வணிகர்களுக்கு எதிராக உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை
மேற்கொண்டது.
பொருள்களுக்கு சிறப்பு இளஞ்சிவப்பு விலைப்பட்டியல் மற்றும் வழக்கான
விலைப்பட்டியலை வைக்காத வணிர்கள் மீதும் இச்சோதனையின் போது
நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சின் அமலாக்கப்பிரிவுன் தலைமை
இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது 12,813.84 வெள்ளி மதிப்புள்ள
பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 43,400 வெள்ளி அபராதமும்
விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
நோன்புப் பெருநாளுக்கு முன்பு ஏழு நாட்களும் பெருநாளுக்குப் பின்னர்
ஏழு நாட்களும் அமலில் இருந்த இந்த விலை உச்சவரம்புத் திட்டத்தின்
போது 158 மொத்த மற்றும் விநியோக வளாகங்களும் 7,097 சில்லறை
வணிக வளாகங்கள் சோதனையிடப்பட்டன என்றார் அவர்.
இவ்வாண்டிற்கான பெருநாள் கால விலை உச்சவரம்புத் திட்ட
அமலாக்கமும் கண்காணிப்பும் சிறப்பாக இருந்தது தொடர்பில் பொது
மக்களிடமிருந்து தாங்கள் நேர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளதாக
அஸ்மான் சொன்னார்.
இந்த பெருநாள் கால விலை உச்சவரம்புத் திட்ட அமலாக்க காலத்தின்
பொது அமைச்சு புகார் எதனையும் பெறவில்லை. சோதனையின் போது
வணிகர்கள் விலை உச்சவரம்பு தொடர்பான விதிமுறைகளை முறையாகப்
பின்பற்றியதும் கண்டறியப்பட்டது என்றார் அவர்.


