MEDIA STATEMENT

ஏ.ஐ. வழி ஆபாசப் படங்களை மாற்றியமைத்து விற்பனை- பதின்ம வயது ஆடவன் கைது

10 ஏப்ரல் 2025, 3:11 AM
ஏ.ஐ. வழி ஆபாசப் படங்களை மாற்றியமைத்து விற்பனை- பதின்ம வயது ஆடவன் கைது

ஜோகூர் பாரு, ஏப். 10-   செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களை மாற்றியமைத்து  சமூக ஊடகங்களில்

விநியோகம் மற்றும் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது முகத்தைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 'நிர்வாண புகைப்படம்' பொதுமக்களுக்கு இணையம் வழி விற்கப்படுவதாகக் கூறி 18 வயது பெண்ணிடமிருந்து  கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தனது துறைக்கு புகார் கிடைத்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

இந்த தகவலின் பேரில் கூலாய் மாவட்ட காவல் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழு நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் கூலாய் பகுதியில் அந்த பதின்ம வயது  ஆடவனை கைது செய்தது.

புகைப்படங்களைத் மாற்றியமைத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படங்கள் ஒவ்வொன்றும் 2 வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது

ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது என அவர் சொன்னார்.

அந்தப் பெண்ணின்  புகைப்படத்தை அவரது  சமூக ஊடகக் கணக்கிலிருந்து எடுத்து அதனை ஏ.ஐ. செயலி மூலம் அந்த இளைஞர்   திருத்தியுள்ளது விசாரணையின் போது கண்டறியப்பட்டது  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் இதர எட்டு பேரிடமிருந்து இதுவரை  ஜோகூர் காவல்துறைக்கு புகார்கள் கிடைத்துள்ளதாக குமார் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 292 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் 1998ஆம் ஆண்டு பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நடவடிக்கைக்காக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவரின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட அவர்,  விசாரணையை சீர்குலைக்கும் மற்றும் சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் எந்த ஊகங்களையும் உருவாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.