தைப்பே, ஏப்ரல் 10 - நேற்று தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள யிலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கி, பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அது அந்நாட்டின் தலைநகரிலும் உணரப்பட்டது, இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து
வெளியேறினர்.
தைவான் நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு.
1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியான வேளையில், கடந்தாண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் பலியாகினர் குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா


