NATIONAL

தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் ஜூன் 15-ஆம் தேதி வரை திறந்திருக்கும்

9 ஏப்ரல் 2025, 5:48 AM
தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் ஜூன் 15-ஆம் தேதி வரை திறந்திருக்கும்
தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் ஜூன் 15-ஆம் தேதி வரை திறந்திருக்கும்

கோலாலம்பூர், ஏப்ரல் 9 - இவ்வாண்டு ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கான முழு நேரத் தொழிற்கல்வி UP_TVET பெர்டானாவிற்கான விண்ணப்பம் எதிர்வரும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும்.

எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்த மாணவர்களும் தொழில்துறை தேவைக்கு ஏற்ற திறன் பயிற்சி துறைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவர்களும் இந்த விண்ணப்பம் வாய்ப்பளிப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

உள்நாட்டுத் திறமைகளைக் கண்டறிவது உள்ளிட்ட நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திவெட் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு வியூகத் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகத் தேசிய திவெட் மன்றத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

UP_TVET என்பது நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் திவெட் பயிற்சிகளின் விண்ணப்பங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.

இதனிடையே, இவ்வாண்டிற்கான திவெட் தினக் கொண்டாட்டம் எதிர்வரும் ஜூன் 11 தொடங்கி 13ஆம் தேதி வரை, மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறும் என்றும் டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.

திவெட் தேசிய மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் அத்தகவல்களைக் குறிப்பிட்டார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.