ஜோர்ஜ் டவுன், ஏப். 9 - பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில்
(ஐபிகே) பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இச்சம்பவம் பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நேற்று நிகழ்ந்தது.
இச்சமாபவத்தில் படுகாயமடைந்த ஐம்பத்தெட்டு வயதான அந்த கார்ப்ரல் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தொடர்பு பெரானாமாவிடம் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் தொடக்கக் கட்டத்தில் உள்ளது. இது குறித்து விரைவில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


