பூச்சோங், ஏப்ரல் 8 - புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காக, `தான் சோங்` மோட்டார் குழுமம் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு, மேலும் 30 கார்களை இரவலாகக் கொடுத்திருக்கிறது. அவற்றில் 3 வாகனங்கள் EV எனப்படும் மின்சார வாகனங்களாகும்.
இதையடுத்து இதுவரை மொத்தமாக 140 கார்கள் இரவல் கொடுக்கப்பட்டிருப்பதாக, முதலீடு, வாணிபம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார். மேலும், 60 கார்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சாதாரண வாகனங்கள் அல்லது EV கார்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில், 1 மாதத்திற்கு அவ்வாகனங்கள் வாடகைக்குத் தரப்படுவதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலையறிந்து வாகனங்களை இரவல் கொடுத்த அனைத்து கார் நிறுவவங்களுக்கும் மாநில அரசு நன்றிக் கூறுவதாக இங் சீ ஹான் தெரிவித்தார்.
புத்ரா ஹைட்ஸ் LRT நிலைய வளாகத்தில் அந்தத் தற்காலிகக் கார்களுக்கான சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.


