NATIONAL

நாட்டில் நிலவும் அமைதிக்கும், நல்லுறவுக்கும் தீங்கிழைக்கும் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்

8 ஏப்ரல் 2025, 5:35 AM
நாட்டில் நிலவும் அமைதிக்கும், நல்லுறவுக்கும் தீங்கிழைக்கும் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்

புத்ராஜெயா, ஏப்ரல் 7 - அமைச்சுப் பணியாளர்களையும் அனைத்து மலேசியர்களையும் அமைதியை கடைப்பிடிக்கவும், சிறு விவகாரங்களை பெரிய மலை போல் மிகைபடுத்தி நாட்டில் நிலவும் அமைதிக்கும், நல்லுறவுக்கும் தீங்கிழைக்கும் வண்ணம் செயல்படும் சமூக ஊடகலாளர்களிடம் கவனம்  இருக்கவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.

கோலாலம்பூர் பலூன் வியாபாரி மற்றும் வழிபாட்டுத் தலம் ஒன்று சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சையை பயன்படுத்தி ஏவப்படும் இனவெறிக் குற்றச்சாட்டுகளுக்கு எவரும் எளிதில்  இரையாகி விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று காலை அரசு ஊழியர்களுக்கு அவர் ஆற்றிய உரையின் போது, சமூக ஊடக பதிவுகள் அல்லது தேவையில்லாமல் பதட்டங்களை தூண்டும் உள்ளடக்கங்களின் செய்திகளை  ஒதுக்கித்தள்ளி ஆக்க்கரமானவைகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் பிரதமர்.

"மலாய்காரர்களிடம்  இன்று உள்ள அதிகாரம்,  அவர்களின்  சோம்பேறித்தனம், இறுமாப்பு மற்றும் சுய பலவீனங்களை மறைப்பதற்கோ அல்லது மற்றவர்களின் பலவீனங்களை ஊதி பெரிதாக்குவதற்கல்ல, அனைவரையும் அரவணைத்து ஒத்த கருத்துடன் ஒற்றுமையாக நல்வாழ்வை நோக்கி, அழைத்து செல்வதே நமது வெற்றி ஆகும் சிறுபான்மையினரை புறக்கணிப்பது அல்லது ஓரங்கட்டுவது ஒருபோதும் நமது சமய போதனைகளின் இல்லை என்றார்.

மலேசியாவில் சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வின் மரபுகளை நிலைநிறுத்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்து பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.