கோலாலம்பூர், ஏப். 6- இன்று காலை 9 மணி நிலவரப்படி தலைநகர் நோக்கிச் செல்லும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது
வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் பெந்தோங் பாராட் முதல் லென்தாங் வரையிலும் பெந்தோங் டோல் சாவடிக்குப் பிறகும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (எல்.எல்.எம்.) பேச்சாளர் தெரிவித்தார்.
இ1 மற்றும் இ2 வழித்தடங்களை உள்ளடக்கிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலயின் (பிளஸ்), இரு திசைகளிலும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (எல்.பி.டி.) 1 மற்றும் 2 போன்ற பிற முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளன என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
நோன்புப் பெருநாளையொட்டி வழங்கப்பட்ட நீண்ட விடுமுறைக்குப் பிறகு பொதுமக்கள் தலைநகருக்குத் திரும்புவதற்கு வசதியாக ஸ்மார்ட்லேன் எனப்படும் விவேக வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பிளஸ் டிராஃபிக் செயலி அறிவித்துள்ளது.
சிலிம் ரிவர் மற்றும் சுங்காய் இடையிலான வடக்கு தடத்தின் 367.3 முதல் 354.0 லது கிலோ மீட்டர், ரவாங்- சுங்கை புவாயா இடையிலான தெற்கு தடத்தின் 439.3 முதல் 435.5வது கிலோ மீட்டர் வரை கிலோமீட்டர் வரை சம்பந்தப்பட்ட ஸ்மார்ட் லேன்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கிளந்தானில், குவா மூசாங் பகுதியில் உள்ள கூட்டரசு சாலையில் காலை 9.00 மணி நிலவரப்படி ஏழு கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.
தோக் பாலி-கோல பெசுட் நுழைவாயில் உட்பட பாசிர் பூத்தே-திரெங்கானு எல்லையில் நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளில் இன்று காலை போக்குவரத்து சீராக இருந்ததாக பாசிர் பூதே மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரித்டெண்டன் ஜெய்சுல் ரிசல் ஜக்காரியா தெரிவித்தார்.


