ஷா ஆலம், ஏப்ரல் 5 - கேரிங் சிலாங்கூர் நிதி (தாபூங் சிலாங்கூர் பிரிஹாத்தின்) மூலம் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியார் துறை, நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து பங்களிப்புகளை மாநில அரசு வரவேற்கிறது.
ஒரு முகநூல் பதிவில், மந்திரி புசார் டத்தோ 'ஸ்ரீ அமிருடின் ஷாரி, பாதிக்கப் பட்டவர்களின் சுமையை குறைக்க தொடர்ச்சியான முயற்சிகளுடன் இந்த நிதி ஒரு கூடுதல் முயற்சியாகும் என்றார்.
CIMB கணக்கு எண் 8604747531 (சிலாங்கூர் மாநில பொருளாளர்) வழியாக "புத்ரா ஹைட்ஸ்" என்ற குறிப்புடன் நன்கொடைகளை வழங்கலாம்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) நடந்த சம்பவத்தில், புத்ரா ஹைட்ஸில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனியில் உள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் தீப்பிடித்தது, தீப்பிழம்புகள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு எழுந்தன. தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.
இதில் 308 குடும்பங்களைச் சேர்ந்த 1,254 பேர் பாதிக்கப்பட்டனர், 87 வீடுகள் முற்றிலும் அழிந்தது அல்லது வசிக்க தகுதியற்றதாகியது. அதே நேரத்தில் 148 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த தீ விபத்து நடந்த இடத்தில் 9.8 மீட்டர் ஆழம் மற்றும் சுமார் 21 x 24 மீட்டர் அளவு கொண்ட ஒரு பள்ளம் உருவானது.


