கோலாலம்பூர், ஏப்ரல் 4 - ரஹ்மா ரொக்க பங்களிப்பு (STR) மற்றும் SARA உதவி திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2025 பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக "மடாணி பொருளாதார கட்டமைப்பு மூலம், பெரும்பான்மையான மக்கள் பயனடைய எளிதான வகையில் உதவி விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அதிநவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
அதில் ஆங்கிலம் , மலாய் மொழியை தவிர்த்து தமிழ் மற்றும் சீன மொழியிலும் அத்திட்டங்கள் தொடர்பான விளங்களை வழங்கி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 5.4 மில்லியன் கொண்ட ரஹ்மா ரொக்க பங்களிப்பு பெறுநர்கள் ஏப்ரல் 2025 முதல் கூடுதல் SARA உதவியைப் பெறுவார்கள். குடும்பப் பிரிவைப் பொறுத்தவரை, கூடுதல் சாரா பங்களிப்பு மாதத்திற்கு RM100 வழங்கப்படும். வாழ்க்கை துணை இல்லாத முதியவர்கள் மாதத்திற்கு RM50 பெறுவார்கள்.
இந்த திட்டங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள https://checkstatus.mykasih.net/sara2/checkstatus இணையத்தளத்தை நாடவும்
SARA திட்டத்தின் கீழ், பயனாளிகள் தங்கள் MyKad ஐப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளில் அடிப்படை பொருட்களை வாங்கலாம்.
சாரா பெறுநர்கள் அடிப்படை உணவுப் பொருட்களுடன் கூடுதலாக தனிப்பட்ட சுகாதார பொருட்கள், மருந்துகள் மற்றும் பள்ளி பொருட்கள் ஆகியவற்றை வாங்க வழங்கப்படும் நிதியை பயன்படுத்தலாம்.


