கோலாலம்பூர், ஏப்ரல் 4 - பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்தால், `Massimo` ரொட்டித் தயாரிப்பு நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரொட்டித் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான LNG எரிவாயு தருவிப்பு இடையூறைச் சந்தித்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை, சந்தையில் `Massimo` ரொட்டிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். இது குறித்து தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் என `The Italian Baker Sdn Bhd` நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அந்த வெடிப்பில் நூற்றுக்கணக்கில் வீடுகள் சேதமடைந்து ஏராளமானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


