NATIONAL

கருஞ்சிறுத்தைத் தாக்கி லாரி ஓட்டுநர் படுகாயம்

4 ஏப்ரல் 2025, 4:40 AM
கருஞ்சிறுத்தைத் தாக்கி லாரி ஓட்டுநர் படுகாயம்

சிரம்பான், ஏப்ரல் 4 - நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான், புக்கிட் தங்கா அருகேயுள்ள சாலையில் கருஞ்சிறுத்தைத் தாக்கி லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் மற்றொரு வாகனத்தின் `dash cam` கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த 16 வினாடி வீடியோ வைரலாகியும் உள்ளது. அதில், லாரி சாலையோரம் நிற்பதும், கருஞ்சிறுத்தை ஆடவரைத் தாக்குவதும் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் வாகனங்கள் வருவது கண்டு சிறுத்தை சாலையின் குறுக்கே ஓடிவது, அந்த லாரி ஓட்டுநர் விழுந்து கிடப்பது மற்றும் வீடியோவைப் பதிவுச் செய்த கார் லாரியின் முன்பக்கம் சென்று நிற்பதையும் காண முடிந்தது.

பாதிக்கப்பட்ட ஆடவர் தனது முகத்தில் ஏற்பட்ட காயங்களால் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன. அச்சம்பவம் குறித்து காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.