NATIONAL

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துலக கடப்பிதழ் இலவசமாக மாற்றி தரப்படும்

4 ஏப்ரல் 2025, 3:42 AM
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துலக கடப்பிதழ் இலவசமாக மாற்றி தரப்படும்

புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 4 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துலக கடப்பிதழை, மலேசிய குடிநுழைவுத்துறை இலவசமாக மாற்றி வழங்கும்.

அதனை இலவசமாக மாற்றி வழங்கும்படி உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உத்தரவிட்டதாக, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

தீயினால் தங்களின் கடப்பிதழ் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ, பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் கட்டணமின்றி மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று டத்தோ சகாரியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன அல்லது சேதமடைந்த கடப்பிதழ்கள், காலாவதியாவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பது விண்ணப்பத்திற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

அதோடு, தங்களிடம் இருக்கும் அசலான கடப்பிதழையும், விண்ணப்பதாரர் கொண்டு வர வேண்டும்.

காவல்துறை, தீயணைப்பு அல்லது உள்ளூர் அமலாக்க தரப்பிடம் செய்யப்பட்ட புகார் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.