NATIONAL

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: CIMB, Bank Islam வங்கிகள் மற்றும் Etiqa தக்காஃபுல் உதவிக் கரம் நீட்டியுள்ளன

3 ஏப்ரல் 2025, 8:39 AM
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: CIMB, Bank Islam வங்கிகள் மற்றும் Etiqa தக்காஃபுல் உதவிக் கரம் நீட்டியுள்ளன

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக CIMB, Bank Islam வங்கிகள் மற்றும் Etiqa தக்காஃபுல் காப்பீட்டு நிறுவனமும் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

இந்த உதவிகளைப் பெற பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் அடிப்படை தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும் என்ற அளவுக்கு குறிப்பிட்ட வங்கிகள் விண்ணப்ப முறைகளை எளிதாக்கியுள்ளன.

குறிப்பாக கடன் தவணைப் பணம் தாமதமானால் விதிக்கப்படும் அபராதக் கட்டணங்களிலிருந்து, புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு CIMB வங்கி விலக்கு அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறு நடுத்தர வியாபாரிகளும் கூடுதல் ரொக்க உதவித் தேவைப்படும் பட்சத்தில், கூடுதல் முதலீடுக் கோரி விண்ணப்பிக்கலாம்.

சேதமடைந்த வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் பற்று அட்டைகள், வங்கிக் கணக்கு அறிக்கை, அல்லது வங்கிக் கணக்கு புத்தகம், வங்கியாளரின் காசோலைகள் ஆகியவற்றை மாற்றுவதற்கும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

அதே சமயம், காப்பீட்டு கோரிக்கைகளை விரைவுபடுத்த CIMB அதன் காப்பீட்டு பங்காளிகளுடன் நெருக்கமாக செயல்படும். உதவித் தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள் CIMB இணையத் தளத்திற்குச் சென்றோ அல்லது 03-6204 7788 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

இவ்வேளையில், Bank islam வங்கி, தனிநபர், வீட்டுக் கடன் மற்றும் வாகனங்களுக்கான கடன்களின் தவணைப் பணத்தைச் செலுத்துவதை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு தளர்வு வழங்கியுள்ளது.

மேல் விவரங்களுக்கு அருகிலுள்ள Bank islam வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.

முன்னதாக, Maybank வங்கியின் காப்புறுதி பாதுகாப்பு இணை கிளை நிறுவனமான Etiqa தக்காஃபுல், புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தனது அனைத்து வாடிக்கையாளர்களையும் பாதுகாப்போம் என அறிவித்தது.

உதவிக்கான கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு காவல்துறை புகார்கள் தேவையில்லை என்றும் அது தெரிவித்தது.

வெடிப்புச் சம்பவத்தில் 237 வீடுகள் சேதமடைந்தன: 275 கார்களும் 56 மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக எரிந்துபோனதும் குறிப்பிடத்தக்கது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.