சுபாங் ஜெயா, ஏப் 3 - புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 50 கார்களை "Chery நிறுவனம் ஏற்பாடு செய்யும் என சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
தீயின் கடுமையான வெப்ப அளவினால் பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததால் அவர்கள் அனுபவித்த சிரமங்களைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் கார்களை வழங்க "Chery`` மலேசியா ஒப்புக் கொண்டது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இது வழங்கப்படும். தனது அலுவலகம் அல்லது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கே கார்கள் வழங்கப்படும் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக அந்த வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்பதோடு இந்த கார்களின் மொத்த மதிப்பு 500,000 ரிங்கிட்டாகும் என அவர் கூறினார்.
இந்த தீ விபத்தினால் 148 கார்கள் மற்றும் 11 மோட்டார்சைக்கிள்களும் பாதிக்கப்பட்டன.


