புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 3 - புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அதன் தொடர்பில் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக, சேதம் மற்றும் சொத்துடைமை இழப்பு குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
"எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் காவ்ல்துறையில் புகார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் புகார் செய்வதற்கு பல முகப்புகள் திறக்கப்பட்டுள்ளன." என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 66 புகார்கள் கிடைத்துள்ளதை சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், ஏ.சி.பி வான் அஸ்லான் வான் மாமாட் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.
வழங்கப்பட்ட புகார்களில் வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்தது, காயங்கள் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை அடங்கும்.
பெர்னாமா


