வாஷிங்டன், ஏப். 3 - இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10 விழுக்காடு குறைந்தபட்ச வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று
அறிவித்தார்.
மலேசியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24 விழுக்கட்டு வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவின் இந்நடவடிக்கை வியாழன் அன்று நிதிச் சந்தைகள் திறக்கப்படும் போது ஆசிய பங்குகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கும் சூழல் ஏற்பட்டது.
நட்பு நாடுகளின் கடும் கண்டனத்திற்கு மத்தியில் டஜன் கணக்கான நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளை விதித்ததன் மூலம் பணவீக்கத்தை அதிகரித்த அமெரிக்க, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலான உலகளாவிய வர்த்தகப் போரை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.
இந்த கடுமையான வரிகள் உலகின் மிகப்பெரிய பயனீட்டாளர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புவதாகவும் உலகளாவிய ஒழுங்கு முறையை வடிவமைத்த பல ஆண்டுகால வர்த்தக தாராளமயமாக்கலை மாற்றும் வகையிலும் அமைகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வர்த்தக பங்காளிகள் தாங்களாகவே எதிர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதிவண்டிகள் முதல் ஒயின் மதுபானம் வரை அனைத்து பொருள்களும் அபரிமித விலையேற்றம் காண வழிவகுக்கும்.
மற்ற நாடுகள் இதற்கு பழிவாங்க வேண்டாம் என்று அமெரிக்க கருவூலத் தலைவர் ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தினார்.
இது எங்கு செல்கிறது என்று பார்ப்போம். ஏனென்றால் நீங்கள் பழிவாங்கினால். அது எங்களுக்குப் பிரச்சனையை அதிகரிக்கும். எதையும் அவசரமாகச் செய்வது புத்திசாலித்தனம் அல்ல என்று அவர் மேலும் கூறினார்.


