கோலாலம்பூர், ஏப்ரல் 3 - இந்த ஆண்டு கலந்து கொள்ளவிருக்கும் போட்டிகளில்,
மொத்தம் 300 கிலோகிராமிற்கு அதிகமான எடையைத் தூக்கி, தமது தேசிய சாதனையைப் புதுப்பிக்க தேசிய பளுதூக்கும் வீரர் முஹமாட் அனிக் கஸ்டான் இலக்கு வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு அவர் பங்கேற்ற இரண்டு முக்கிய போட்டிகளில் சறுக்கல்களை எதிர்நோக்கியதால் மேம்படுத்தப்பட வேண்டிய சில குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறினார்.
2024-ஆம் ஆண்டு பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 300 கிலோகிராமிற்கு அதிகமான எடையைத் தூக்கும் முயற்சியில் அனிக் தோல்வியடைந்தார். இதனால் 61 கிலோகிராம் பிரிவில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
பஹ்ரைனில் நடைபெற்ற உலக எடைத் தூக்கும் போட்டியில், அதே முயற்சியை மேற்கொண்ட அனிக், 296 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜோகூரை பூர்விகமான கொண்ட அவர், மே 9 முதல் 15-ஆம் தேதி வரை சீனா ஜியாங்ஷானில் நடைபெறும் ஆசிய பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார்.
பெர்னாமா


