பெட்டாலிங் ஜெயா, ஏப். 1- சுபாங் ஜெயாவில் உள்ள ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸ் பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் தீயின் தாக்கம் இன்னும் குறையவில்லை.
அப்பகுதியில் தீச்ஜூவாலைகள் வானுயரத்திற்கு எழும் நிலையில்
பாதுகாப்பு கருதி சம்பவ இடத்தின் நுழைவாயிலை போலீசார் மூடியுள்ளனர்.
பெர்சியாரான் ஹார்மோனியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அந்த இடத்தின் நுழைவாயிலை மூடியிருப்பதும் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுபகுதிக்குள் பொது மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதும் பெர்னாமாவின் ஆய்வில் தெரிய வந்தது.
தீ விபத்து நடந்த இடத்தின் நுழைவாயிலில் கூடி தீ விபத்து குறித்த படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்து பரப்பிக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டது.
பல தீயணைப்பு, காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதை இந்த ஆய்வில் காண முடிந்தது.
இதற்கிடையில், இன்று காலை 8.25 மணியளவில் நடைப் பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 70 வயதான ஹர்பான் சிங் கூறினார்.
முதலில் தீ கொளுந்துவிட்டு எரிவதை காண முடிந்தது. இப்போது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. தீயின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆனால் முன்பு போல் அதிகமாக உயரத்திற்கு பரவவில்லை என அவர் கூறினார்.
இந்தப் பகுதியில் வசிப்பவர்களும் தீயின் வெப்பத்தை உணர்ந்தனர். வெப்பம் காரணமாக வீட்டுக் கண்ணாடிகளில் விரிசல் ஏற்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று சுபாங்கின் யுஎஸ்ஜே 9 இல் வசிக்கும் ஹர்பான் சிங் சொன்னார்.
தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதியும் தீயினால் பாதிக்கப்பட்டதாக
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 நிமிட பயண தூரத்தில் உள்ள தாமான் தாசேக் பிரிமாவில் வசிக்கும் கே. பத்மாவதி கூறினார்.


