கோலாலம்பூர், ஏப். 1- பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் அருகே உள்ள பிரதான எரிவாயு குழாயில் இன்று காலை 8.10 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதை பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அது கூறியது.
நிலைமையைக் கையாள உள்ளுர் அதிகாரிகளுடன் நாங்கள் அணுக்கமாக செயல்பட்டு வருகிறோம். இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கூடுதல் விபரங்களை விரைவில் வெளியிடுவோம் என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ், எல்டிபி 2வது கிலோ மீட்டர் மற்றும் புத்ரா பெஸ்தாரி பெட்ரோல் நிலையங்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பெட்ரோனாஸ் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டது.
சுற்றுவட்டார மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் நாட்டின் எரிவாயு விநியோகத்திற்கு தாங்கள் அதிகப்பட்ச முன்னுரிமை அளிப்பதாக அந்நிறுவனம் உறுதியளித்தது.


