இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், அமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார், மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல், மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வை உட்பட 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த உபசரிப்பில் துருக்கி, எகிப்து, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உட்பட வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த உபசரிப்பில் லெமாங், கெத்துபாட், ரெண்டாங் மற்றும் நாசி பிரியானி தவிர, லக்சா ஜோகூர் மற்றும் மீ ரெபுஸ் உள்ளிட்ட ஜோகூர் மாநில உணவுகள் இடம்பெற்றன.
விருந்தினர்களை ஜோகூர் இராணுவப் படை இசைக்குழு நோன்புப் பெருநாள் பழம் பாடல்களை இசைத்து மகிழ்வித்தனர்.
முன்னதாக ,சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் கூட்டரசு பிரதேச பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தினர்.


