மண்டலே (மியான்மார்), மார்ச் 31- நாட்டை உலுக்கிய மோசமான பூகம்பத்திற்குப் பின்னர் இன்று வரை ரிக்டர் அளவில் 2.8 முதல் 7.5 வரைப் பதிவான 36 நில அதிர்வுகள் பதிவு செய்யபட்டதாக மியான்மாரின் வானிலை மற்றும் நீரியல் துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12.51 மணிக்கு மியான்மாரை உலுக்கிய 7.9 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அத்துறையை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.


