ஈப்போ, மார்ச் 31- வடக்கு தெற்கு (பிளஸ்) விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 264.7வது கிலோ மீட்டரில் உள்ள மெனோரா சுரங்கப்பாதையில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
இந்த விபத்தில் ஒரு பெண்ணும் ஒரு ஆடவரும் படுகாயமடைந்ததாக ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்புத் நிலையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பில் மெனோரா கட்டுப்பாட்டு நிலையத்திற்கு மாலை 6.45 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இச்சம்பவத்தில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் இ.எம்.ஆர்.எஸ். மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டனர் என அது குறிப்பிட்டது.
முன்னதாக, இந்த விபத்தைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


