கோலாலம்பூர், மார்ச் 29 ;- பண மோசடிகள் தொடர்பாக வழக்கினை தீர்ப்பதற்காக காவல்துறைக்கு கொடுக்க வேண்டும் என கோரி பொதுமக்களிடம் RM 10 மில்லியன் மோசடி செய்ததாக நம்பப்படும் டான் ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட ஒரு தொழிலதிபரை ராயல் மலேசியா காவல்துறை (PDRM) கைது செய்தது.
ஜப்பான் ஒசாகாவிலிருந்து வீடு திரும்பிய 59 வயதான அவரை ஜாலான் ஊத்தாண்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகலில் பி. டி. ஆர். எமின் புக்கிட் அமான் சிறப்பு பிரிவு கைது செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
"சந்தேகத்திற்குரிய இவர் இதுவரை பாதிக்கப் பட்டவர் களிடமிருந்து சுமார் RM 10 மில்லியனை வசூலித்து உள்ளதாகவும், அவர் ஆரம்பத்தில் RM 25 மில்லியனைக் கோரினார் என்றும், காவல்துறையினருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருப்பதால் தான் போலீசாரிடம் பேசி வழக்குகளை தீர்க்க முடியும் என்று கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது".
"மேலும், பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்காக வசூலிக்கப்பட்ட பணம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று சந்தேக நபர் உறுதி அளித்ததாகவும், இதனால் அவர்கள் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும் , அல்மா விசாரணையிலிருந்து விடுபட முடியும் என வாக்களித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர் என்று இன்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
எவ்வாறாயினும், சந்தேக நபரின் நடவடிக்கை மீது புக்கிட் அமான் குழு ஏற்கனவே ரகசிய விசாரணை நடத்தி உள்ளதாகவும், நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.


