கோத்தா பாரு, மார்ச் 29- கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தில் கைவிடப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது வாரிசுகளை கோத்தா பாரு சமூக நலத்துறை (ஜே.கே.எம்) தேடி வருகிறது.
அந்தக் குழந்தை தொப்புள் கொடியுடன் காணப்பட்டதால் அது புதிதாகப் பிறந்த குழந்தை என்று நம்பப்படுவதாகவும் இது தவிர வேறு எந்த ஆவணங்களும் கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் கோத்தா பாரு மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சமூக மேம்பாட்டு அதிகாரி நூருல் அஃபீரா அஸ்வா முகமது கூறினார்.
சிகிச்சை பெறுவதற்காக அக்குழந்தையை சம்பந்தப்பட்டத் தரப்பினர் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனை கொண்டுச் சென்றுள்ளனர் என அவர் சொன்னார்.
அக்குழந்தை இப்போது குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது. 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் (2016 திருத்தம்) 25 (2)வது பிரிவின் கீழ் அக்குழந்தை தற்காலிக பராமரிப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையின் பெற்றோர் அல்லது வாரிசுகள் கோத்தா பாரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, பொது நல அலுவலகத்தை 013-9678552 அல்லது 09-7422034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


