NATIONAL

பிப்ரவரி மாதம் சிலாங்கூர் உள்ளிட்ட எட்டு மாநிலங்களின் ஏற்றுமதி மதிப்பு 7,160 கோடி வெள்ளியாக உயர்வு

28 மார்ச் 2025, 6:29 AM
பிப்ரவரி மாதம் சிலாங்கூர் உள்ளிட்ட எட்டு மாநிலங்களின் ஏற்றுமதி மதிப்பு 7,160 கோடி வெள்ளியாக உயர்வு

கோலாலம்பூர், மார்ச் 28 - இம்மாதம் பிப்ரவரி மாதம் நாட்டிலுள்ள எட்டு

மாநிலங்களின் ஏற்றுமதி மதிப்பு 7,160 கோடி வெள்ளியாக உயர்வு கண்டு

நாட்டின் மொத்த ஏற்றுமதியை 11,830 கோடி வெள்ளியாக உயர்த்தியுள்ளதாகப் புள்ளிவிபரத் துறை கூறியது.

கடந்த 2024 ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த

எண்ணிக்கை 690 கோடி வெள்ளி அல்லது 6.2 விழுக்காடாடு அதிகமாகும்

என்று தலைமை புள்ளிவிபர நிபணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர்

மாஹிடின் கூறினார்.

பினாங்கு (வெ.930 கோடி), சிலாங்கூர் (வெ.130 கோடி) மற்றும் மலாக்கா

(65.62 கோடி) ஆகிய மாநிலங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு உயர்வுக்கு

காரணமாக அமைந்ததாக அவர் சொன்னார்.

இந்த மூன்று மாநிலங்களோடு சபா (வெ.62.31 கோடி), பேராக் (வெ.41.11

கோடி), கிளந்தான் (வெ.16.55 கோடி), பெர்லிஸ் (வெ.2.93 கோடி), லபுவான்

கூட்டரசு பிரதேம் (வெ.2.15 கோடி) ஆகியவையும் ஏற்றுமதி உயர்வுக்கு

பங்காற்றியுள்ளன.

இதனிடையே, இக்காலக்கட்டத்தில் சரவாக் மாநிலத்தின் ஏற்றுமதி 300

கோடி வெள்ளியாக குறைந்துள்ளது. மேலும் கெடா 90 கோடி

வெள்ளியையும் பகாங் 77.75 கோடி வெள்ளியையும் கோலாலம்பூர் 32.37

கோடி வெள்ளியையும் திரங்கானு 49.10 கோடி வெள்ளியையும் நெகிரி

செம்பிலான் 15.22 கோடி வெள்ளியையும் ஜோகூர் 39 லட்சம்

வெள்ளியையும் ஏற்றுமதியாகப் பதிவு செய்துள்ளன என்று அவர்

தெரிவித்தார்.

பினாங்கு மாநிலம் தொடர்ந்து முதன்மை ஏற்றுமதியாளராக விளங்கி

வருவதாகக் கூறிய அவர், மொத்த ஏற்றுமதியில் அம்மாநிலம் 34.2

விழுக்காட்டைப் பிரதிபலிக்கிறது என்றார்.

சிலாங்கூர் மாநிலம் முதன்மை இறக்குமதியாளராக தொடர்ந்து விளங்கி

வரும் நிலையில் அதன் இறக்குமதி மதிப்பு 25.9 விழுக்காடாக உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர், பினாங்கு, கோலாலம்பூர், கெடா

ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.