கோலாலம்பூர், மார்ச் 28 - 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்து விழுக்காடு ஈவுத்தொகை விகிதத்தையும் 0.25 விழுக்காடு போன்ஸையும் இராணுவப்படை நிதி வாரியம், எல்டிஏடி அறிவித்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான தொகையாகும்.
இதன் வழி மலேசிய இராணுவப் படையின் உறுப்பினர்கள் உட்பட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 14 பேர் பயனடைந்ததாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டின் மொத்த விநியோக தொகையான 51 கோடியே 42 லட்சம் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டு 48 கோடியே 50 லட்சத்து எட்டாயிரம் ரிங்கிட்டாக அதிகரித்தது.
கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிகமான ஈவுத்தொகையாக இது அமைந்திருக்கின்றது.
இவ்வாண்டு மார்ச் 28ஆம் தேதி 2024ஆம் ஆண்டிற்கான ஈவுத்தொகை பங்களிப்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். அதன் அறிக்கைகளை MyWIRA செயலி அல்லது எல்டிஏடி இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம்.
பெர்னாமா


