NATIONAL

மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காக்கா TASKA Team MAS அறிமுகம்

28 மார்ச் 2025, 6:15 AM
மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காக்கா TASKA Team MAS அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச் 28 - TASKA Team MAS-யை அறிமுகப்படுத்துவதன் மூலம் மலேசிய விளையாட்டாளர்களின் நலனைக் காப்பதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொடர்ந்து கவனம் செலுத்துவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஆதரவு தேவைப்படும் மலேசிய விளையாட்டாளர்களுக்காகக் குழந்தைகள் பராமரிப்பு மையம், TASKA-வை அமைச்சு தொடங்கியுள்ளது.

இந்த TASKA, பராமரிப்பு மையமாக செயல்படுவது மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் மற்றும் அத்துறை பணியாளர்களின் குடும்பப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த உதவுவதில், அமைச்சு கடப்பாடு கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

மலேசிய விளையாட்டு மன்றம் கீழ், விளையாட்டு வீரர்களின் ஒப்பந்தங்களை மேம்படுத்துவதில், இந்த முயற்சி கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும் என்று ஹன்ன யோ கூறினார்.

"முன்பு விளையாட்டு வீரர்களின் ஒப்பந்தத்தில் அவர்கள் கர்ப்பம் தரித்தால் பயிற்சிகள் மேற்கொள்வது நிறுத்தப்படும். ஆனால் இப்போது ஒப்பந்தத்தில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்பட்ட விளையாட்டு வீரர் பயிற்சி பெற முடியாது என்ற விதியை நீக்கியுள்ளோம், ஆனால், இப்போது விளையாட்டு வீரரின் திறனை அது பொறுத்துள்ளது", என்றார் அவர்.

அதேவேளையில், ஆண்டு விடுமுறை மற்றும் அவசர விடுப்புக்கான தகுதியையும் சேர்த்து, விளையாட்டாளர்களுக்கான தலா ஏழு நாள்கள் விடுமுறை ஒப்பந்தமும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ISN எனும் தேசிய விளையாட்டு கழகத்தில் உள்ள TASKA Team MAS-சில் அதிகபட்சமாக 70 பேர் வரை பராமரிக்கப்படும் நிலையில், தற்போது 25 குழந்தைகள் அங்கு கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும் இந்த மையம், 2 மாதம் தொடங்கி 4 வயது வரையிலான குழந்தைகளைப் பராமரிக்கின்றது.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.