பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 - தும்பாட்டில் சுயமாகத் தயாரித்தப் பட்டாசுகளுடன் விளையாடும்போது அவை வெடித்ததில் 12 வயது சிறுவன் தனது ஐந்து விரல்களை இழந்தான்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது இரு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்தது.
இச்சம்பவத்தில் அச்சிறுவனுடன் உடன் இருந்த மற்ற இரண்டு நண்பர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சைனி ஹுசின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர், தொடர் சிகிச்சைக்காக ராஜா பெரெம்புவான் ஸைனாப் இரண்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக, தும்பாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது சிறுவனின் உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளந்தானில் இதுவரை மொத்தம் 23 பேர் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து விரல்களை இழந்ததாக சைனி கூறினார்.
-- பெர்னாமா


