NATIONAL

இந்திய சிறு தொழில் வணிகர்களுக்காக `வணிகம்' எனும் புதிய திட்டம் அறிமுகம்

27 மார்ச் 2025, 8:50 AM
இந்திய சிறு தொழில் வணிகர்களுக்காக `வணிகம்' எனும் புதிய திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச் 27 - இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் `வணிகம்' எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SME வங்கியின் வாயிலாக இத்திட்டத்திற்கு ஐந்து கோடி ரிங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்

மடாணி அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பல திட்டங்களை இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக், அமானா இக்தியாரின் பெண் திட்டம், பேங்க ரக்யாட்டின் கீழ் பிரிவ் - ஐ, எஸ்எம்இ கோர்ப் வாயிலாக I-BAP உட்பட பல திIட்டங்கள் அதில் அடங்கும்.

அந்த வரிசையில் புதிதாக அறிமுகம் கண்டுள்ள இந்த 'வணிகம்' திட்டம் சுமார் 250 வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரிங்கிட் வரையில் இந்த வங்கியிலிருந்து கடனுதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதற்கான வட்டி விகிதல்-3.7இல் இருந்து 6 விழுக்காடு வரை மட்டுமே நிர்ணயிக்கின்றனர். மேலும் இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கியின் ஏற்பாட்டில் வழிகாட்டி முகப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அவர்

எனவே, இணையம் மூலமாகவோ அல்லது வங்கிக்கு நேரடியாகச் சென்றோ விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் விரைவில் பரிசிலிக்கப்பட்டு அதை ஏற்றுக் கொள்ளும் நடைமுறைகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.