ஷா ஆலம், மார்ச் 27- கோல லங்காட்டில் எதிர்வரும் மார்ச் 29 முதல் 31 வரை கடலில் நீர் மட்டம் 5.6 மீட்டரை உயர்ந்து கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தவிர்க்கும் அதேவேளையில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி கோல லங்காட் நகராண்மைக் கழகம் மன்றம் (எம்.பி.கே.எல்.) பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வரும் மார்ச் 29ஆம் தேதி மாலை 6.26 மணிக்கு கடல் மட்டம் 5.5 மீட்டரையும் மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் 5.6 மீட்டரையும் எட்டும் என நகராண்மைக் கழகத்தால் பகிரப்பட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடல் பெருக்கு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசர சூழல்களில் எம்.பி.கே எல். விரைவுப் பணிப் படையை 012-3004256 என்ற எண்ணில் அல்லது 012-3004130 என்ற புகார்களுக்கான ஹாட்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


