சிரம்பான், மார்ச் 25 - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரையில், நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளால் சாலையை மூடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கை தேதிகளுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டதாகப் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அரச மலேசியக் காவல்துறை படை பி.டி.ஆர்.எம். சாலைப் போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே. உட்பட மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவையே அந்த நிறுவனங்கள் என்று நந்தா லிங்கி கூறினார்.
"இந்த நெடுஞ்சாலை தடங்களை மூடுவதற்கான தடை, அவசரகால பணிகளை உட்படுத்தாது. இது அமைச்சால் வெளியிடப்பட்ட வழக்கமான ஓர் உத்தரவு அதாவது, எந்த கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது.
ஏனெனில், அது பெருநாள் காலத்தில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் போது இடையூறாக இருக்கும் மற்றும் நெரிசலை ஏற்படுத்தும்.' என்றார் அவர்.
சிரம்பான் கோல பிலா சாலையின் கூடுதல் வழித்தடத்தை திறந்து வைத்தப் பின்னர், நந்தா லிங்கி இவ்வாறு கூறினார்.


