NATIONAL

பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா பங்கேற்பது, சந்தை அணுகலை விரிவுபடுத்தும்

25 மார்ச் 2025, 6:43 AM
பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா பங்கேற்பது, சந்தை அணுகலை விரிவுபடுத்தும்

நாடாளுமன்றம், மார்ச் 25 - பிரிக்ஸ் நாடுகளின் பங்காளியாக மலேசியா பங்கேற்பது, சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் ஒரு பாரம்பரிய சந்தையை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தும்.

தென்னாப்பிரிக்கா, பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு சிற்றரசு, போன்ற பிரிக்ஸ் நாடுகள் உடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பங்கேற்பு மலேசியாவிற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

அதோடு, இது ஆசியான் உறுப்பு நாடாக மலேசியாவின் நிலைக்குப் பயனளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செனட்டர் டத்தோ லிம் பெய் ஹென் எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் இவ்வாறு பதிலளித்தார்.

பிரிக்ஸ் பங்காளி நாடாக பங்கேற்பதற்கு எந்தவொரு ஒப்பந்த உறுதிமொழியும் தேவையில்லை என்றும், தாய்லாந்து, வியட்நாம் உட்பட மலேசியாவும் ஆசியான் வட்டாரத்திற்கான பிரிக்ஸ் பங்காளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.