கோலாலம்பூர், மார்ச் 23 - பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் திறமையான முன்னறிவிப்பு முறையும் வானிலை மாற்றங்களுக்கு விரைவான பதிலளிக்கும் முறையும் மிக முக்கியமானவை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வானிலை தொடர்பான தகவல்களை வழங்குவதில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் வானிலை ஆய்வுத் துறைக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நீங்கள் நாட்டின் 'வானிலை முன்னோடிகள்', எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.
இந்த முயற்சிகள் தொடர்ந்து பாராட்டப்படும். மேலும் அன்றாட வாழ்வில் வானிலை புதுப்பிப்புகளின் முக்கிய பங்கு குறித்து பொதுமக்களுக்கு மேலும் கற்றுக் கொடுங்கள். வானிலை வீரர்களே, சிறந்த பணியைத் தொடருங்கள் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று அனுசரிக்கப்படும் 2025 ஆம் ஆண்டு உலக வானிலை தினத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஜாஹிட்
தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் கருப்பொருள் 'முன்னெச்சரிக்கை இடைவெளியை ஒன்றிணைந்து குறைப்போம்' என்பதாகும். சரியான நேரத்தில் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் உயிர்களைக் காப்பாற்றும் என்பதை இது நினைவூட்டுகிறது என்று அவர் கூறினார்


