கோலாலம்பூர், மார்ச் 21 - மிகவும் மோசமான நிலையில் உள்ள மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சின் தரப்பு எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
அங்குள்ள நிலவரத்தை நேரில் காண நாடாளுமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும் தங்கள் தரப்பு அழைக்கவிருப்பதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
"ஆரவமுள்ளவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கவுள்ளோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பேருந்தில் சென்று நான்கு இடங்களைக் காணவுள்ளோம். அவை மோசமான இரண்டு இடங்களும், மேம்படுத்தப்பட்ட இரண்டு இடங்களும் ஆகும். எனவே, (மேம்படுத்தப்படுவதற்கு) முன்னரும் பின்னரும் எப்படி உள்ளது என்று நீங்கள் காணலாம். பின்னர், இந்த சட்டம் ஏன் முக்கியம் என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம் என்றார் அவர்.
இதன்வழி அவர்கள் நகர புதுப்பித்தல் சட்ட மசோதாவின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்று ஙா கூறினார்.
அதைத் தவிர்த்து, அதிகரித்து வரும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப உரிமையாளர்களுக்கும் மேலும் சிறந்த குடியிருப்பு கிடைக்க இந்த புதுப்பித்தல் நடவடிக்கை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஙா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
பெர்னாமா


