பாசல், மார்ச் 21 - இன்று அதிகாலை நடைபெற்ற சுவிட்சர்லாந்து பொது பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்று, நாட்டின் கலப்பு இரட்டையரான கோஹ் சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
தாய்லாந்தின் ருத்தனாபக் ஒப்தோங் ஜெனிச்சா சுட்ஜைப்ரபாரத் ஜோடியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டிலேயே 20-22 என்ற புள்ளிகளில் தோல்வி கண்ட மலேசியர்கள், இரண்டாம் செட்டில் 25-23 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, ஆட்டத்தை மூன்றாம் செட்டிற்கு கொண்டுச் சென்றனர்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில், 21-11 என்ற புள்ளிகளுடன் வெற்றி கண்டு, சூன் ஹூவாட் - ஷெவோன் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
மலேசியாவின் இதர விளையாட்டாளர்கள் அனைவரும் தோல்வி கண்டுள்ள நிலையில், இப்போட்டியில் சூன் ஹுவாட்-ஷெவோன் மட்டுமே தொடர்ந்து பயணிக்கின்றனர்.
அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகும் பொருட்டு, இவர்கள் மீண்டும் தாய்லாந்து விளையாட்டாளர்களுடன் மோதவுள்ளனர்.
--பெர்னாமா


