கோலாலம்பூர், மார்ச் 21 - அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் நோன்பு பண்டிகையை முன்னிட்டு, டோல் கட்டணத்தில் கழிவு வழங்குவது குறித்து, மடாணி அரசாங்கம் கூடிய விரைவில் அறிவிக்கும்.
கடந்த மாதம், சீனப் புத்தாண்டின் போது, வழங்கப்பட்ட டோல் கட்டண கழிவைப் போன்று அது அமையும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி விளக்கினார்.
கோலாலம்பூரில் உள்ள பொதுப்பணி வளாகத்திற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அலுவல் பயணத்திற்குப் பின்னர், நந்தா லிங்கி அதனை கூறினார்.
கடந்த மாதம் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களிடம் 2 கோடியே 6 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கி, இரண்டு நாள்களுக்கு வழக்கமான டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவை, மடாணி அரசாங்கம் ஒப்புக் கொண்டதை நந்தா சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா


