கோலாலம்பூர், மார்ச் 21 - சில்லறை விற்பனையில் உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெய் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு (ecosS) எனப்படும் சமையல் எண்ணெய் விலையை நிலைப்படுத்தும் முன்னோடித் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொட்டலமிடுபவர்கள் முதல் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வரை செல்லும் பாக்கெட் சமையல் எண்ணெய்யின் பயணத்தைக் கண்காணிக்க eCOSS உருவாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர், ஃபுவ்சியா சாலே கூறினார்.
"வெளிநாட்டினர் உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெயை வாங்க முடியாததை உறுதிப்படுத்தப் பயனீட்டாளர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலமோ அல்லது பிற முறைகளையோ பயன்படுத்த வேண்டியிருக்கும்," என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெயை மறைத்து வைப்பதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ, அமலாக்கத் தரப்பினர் எந்த அளவிற்குத் தடுக்க முடியும் என்று செனட்டர் டத்தோ சலேஹுடின் சைடின் எழுப்பியக் கேள்விக்கு பூவ்சியா சாலே இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா


